அமெரிக்க போர் விமானத்தை 10 அடியில் நெருங்கிய சீன ஜெட்| Chinese jet came within 10 feet of US bomber over South China Sea

வாஷிங்டன்: சர்வதேச வான் எல்லையில் அமெரிக்காவின் போர் விமானத்தை, சீன ஜெட் விமானம், 10 அடி தொலைவில் நெருங்கி பயணித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது.

தென் சீன கடற்பகுதியில் சர்வதேச வான் எல்லையில், அமெரிக்க விமான படையின், பி52 குண்டுவீச்சு விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது, அதன் அருகே சீனாவின், ‘ஷென்யாங் ஜே 11’ என்ற போர் விமானம், முன் அறிவிப்பின்றி வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அவ்வப்போது அருகருகே பறந்து வந்த சீன ஜெட் விமானம், ஒரு கட்டத்தில், 10 அடி தொலைவில் நெருக்கமாக பறந்து வந்ததாக கூறிய அமெரிக்கா, அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுஉள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் இந்தோ – பசிபிக் பிரிவு கூறுகையில், ‘சீன போர் விமானியின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருந்தன.

‘அதீத வேகத்தில் அவர் அமெரிக்காவின் விமானத்துக்கு அருகில் பறந்து ஆபத்தை ஏற்படுத்தினார். சர்வதேச வான் பாதுகாப்பு விதிகளை மீறும் வகையில் வெளிச்சம் குறைவாக இருந்த நேரத்தில் இரவில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது’ என, தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

இஸ்ரேல் ஹமாஸ் போர் ஒரு பக்கம் தொடரும் நிலையில், மற்றொரு புறம் சிரியாவில் இருக்கும் ஈரான் இலக்குகளைக் குறிவைத்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் படை மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் பயன்படுத்தி வரும் இரண்டு தளங்களைக் குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

latest tamil news

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதல்கள், சமீப காலமாக நடந்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.