Prime Minister praises writer Sivasankari, writer Perumal from Kumari | எழுத்தாளர்கள் சிவசங்கரி, பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவதாகவும், கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாள் கதை சொல்லும் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறார் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த மாதம், காதி விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்துள்ளது. கடந்த காலங்களில் 30 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான காதி பொருட்கள் இந்த மாதம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. விவசாயிகள், குடிசை தொழில் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்துள்ளனர்.

சுற்றுலா செல்லும் போது, ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போது, அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். உங்களது பட்ஜெட்டில், அதற்கு நிதி ஒதுக்குங்கள். 10 சதவீதமோ அல்லது 20 சதவீதமோ உங்களால் முடிந்தளவு பணத்தில் உள்ளூர் பொருட்களை வாங்குங்கள். பண்டிகை காலத்தில், உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

latest tamil news

தமிழ் எழுத்தாளர் சகோதரி சிவ சங்கரி இலக்கியம் மூலம் ‛ knit india ‘ என்ற திட்டத்தை தயாரித்துள்ளார். இது இலக்கியம் மூலம் நாட்டை இணைப்பது ஆகும். இதற்காக அவர் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், இம்பாலில் இருந்து ஜெய்சால்மர் வரையிலும் பலமுறை நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடன் கலந்துரையாடினார்.

சிவசங்கரி பல்வேறு இடங்களுக்குச் சென்று பயணத் தகவல்களை வெளியிட்டார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. இந்தத் திட்டத்தில் நான்கு பெரிய தொகுதிகள் உள்ளன, ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவளுடைய உறுதியின் வலிமையைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

அதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தின் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்த பணியில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். நாட்டுப்புற கலை வடிவங்களை கண்டறிந்த அவர், அது குறித்து தனது புத்தகத்தில் எழுதி உள்ளார். அது போன்று இதுவரை 100 புத்தகங்களை எழுதி உள்ளார்.

அதனுடன், தமிழகத்தில் கோயில் பாரம்பரிய கலாசாரம் குறித்து ஆராய்வதில் விருப்பம் கொண்டவர். உள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் பயனளிக்கும் தோல் பொம்மைகள் குறித்தும் அவர் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.