India vs England Live Score: லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒருநாள் உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. ரோஹித் சர்மாவும் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங் தான் எடுத்து இருப்பேன் என்று கூறி இருந்தார். இரு அணிகளும் கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் களமிறங்கி உள்ளனர். இந்த போட்டியில் ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலி ஆரம்ப விக்கெட்டுகளை கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளனர். ஷுப்மான் கில் ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார், மேலும் கிங் கோஹ்லி இந்த ஆட்டத்தில் 9 பந்துகளில் டக் அவுட் ஆனார். ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் விராட் கோலியின் முதல் டக் அவுட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
First duck for Virat Kohli in the World Cups (ODI/T20)
His stoveee) October 29, 2023
ஷ்ரேயஸ் ஐயரும் மோசமான முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். எப்போதும் அதிரடியாக விளையாட கூடிய ரோஹித் விக்கெட் விழுந்ததால் பொறுப்புடன் ஆடி வருகிறார். இந்த உலக கோப்பையில் மற்றொரு அரைசதத்தை பதிவு செய்துள்ளார். கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் இப்போது இன்னிங்ஸை மீண்டும் கட்டமைத்து வருகின்றனர். ஆரம்ப ஸ்விங் இப்போது சற்று குறைந்து பந்து பேட்டிக்கு வர ஆரம்பித்து உள்ளது. KL ராகுல் முன்பு இதுபோன்ற அழுத்தமான சூழ்நிலைகளில் நன்றாக விளையாடி உள்ளதால் இன்று மீண்டும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
Leading from
Follow t//t.co/etXYwuCQKP#CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/vRhkDcM4N4
— BCCI (@BCCI) October 29, 2023
ஒருநாள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பேட்டர்களில் அதிக டக் அவுட்டை பதிவு செய்தவர் யார் மற்றும் பட்டியலில் விராட் கோலி எந்த இடத்தில் உள்ளார் என்பதைப் பார்ப்போம். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டக் (34) பதிவு செய்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக டக்:
சச்சின் டெண்டுல்கர் – 34
விராட் கோலி – 34
ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக டக்:
சச்சின் டெண்டுல்கர் – 20
யுவராஜ் சிங் – 18
சவுரவ் கங்குலி – 16
ரோஹித் சர்மா – 16
விராட் கோலி – 16