வாஷிங்டன்: தனது முழு பலத்தால் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ்-ஐ ஒழித்து கட்ட வேண்டும் என இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் உள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் விவேக் ராமசாமி இஸ்ரேல்- ஹமாஸ் போர் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பலம் எனும் ஒரு மொழிதான் எதிரிகளுக்கு புரியும் என்றால் தன் நாட்டை காக்க இஸ்ரேல் அதனை காட்ட தயங்க கூடாது. தனது முழு பலத்தால் , ஹமாஸ்-ஐ இஸ்ரேல் ஒழித்து கட்ட வேண்டும். தனது கையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும், பலத்தையும் உபயோகித்து ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
இஸ்ரேல் யூதர்களின் நாடு. புனித தலத்தை புனித பரிசாக யூதர்கள் பெற்றுள்ளனர். பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்து கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையை அரபு நாடுகள் கைவிட வேண்டும்.
எந்த அரசியல்வாதியும் இந்த உண்மையை பேச விரும்புவதில்லை. ஆனால், நான் பேசுவேன். ஹமாஸ் அமைப்பினரின் மீண்டும் ஒரு “அக்டோபர் 7” சம்பவம் நடைபெறாதவாறு செய்து, தனது நாட்டினருக்கான எதிர்கால எல்லையை பலப்படுத்த இஸ்ரேலால் முடியும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement