IND vs ENG Match Score Update: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை (ICC World Cup 2023) தொடரில் 29ஆவது லீக் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் டாஸை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். குறிப்பாக, இரு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இன்றும் களமிறங்கியது.
இந்திய அணி (Team India) நடப்பு தொடரில் முதல்முறையாக முதல் பேட்டிங் செய்யும் நிலையில், அவர்களுக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை. சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் அடுத்தடுத்து வெளியேறி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். ஒருபக்கம் ரோஹித் சர்மா (Rohit Sharma) போராடிய நிலையில், கே.எல். ராகுல் (KL Rahul) அவருடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை சீரான முறையில் உயர்த்தினர். 40 ரன்களுக்கு இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தபோது, இந்த ஜோடி ஒன்று சேர்ந்தது. அந்த வகையில், இந்த 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கே.எல். ராகுல் 39 ரன்களில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், சூர்யகுமார் யாதவும் (Suryakumar Yadav) அவருக்கு துணையாக ரன்களை எடுத்து வந்தார்.
ரோஹித் – சூர்யகுமார் ஜோடி 33 ரன்களை குவித்த நிலையில், ரோஹித் சர்மா 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த சில ஓவர்களில் ஜடேஜா 8, ஷமி 1, சூர்யகுமார் யாதவ் 49 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். கடைசியில் பும்ரா – குல்தீப் ஜோடி 21 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைக்க இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்தது. பும்ரா 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார், குல்தீப் 9 ரன்களும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி பந்துவீச்சு தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகள், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகள், மார்க் வுட் 1 விக்கெட்டை வீழ்த்தினர். மேலும், நடப்பு தொடரில் ஒருமுறை கூட ஆல்-அவுட்டாகாத அணியாக இந்திய அணி உள்ளது, அது இந்த போட்டியிலும் தொடர்ந்தது.
230 ரன்கள் என்ற இலக்கை (IND vs ENG Target) இங்கிலாந்து துரத்துகிறது. பேர்ஸ்டோவ், மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்ட்ன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என நீண்ட பேட்டிங் வரிசையை இங்கிலாந்து கொண்டுள்ளது. எனவே, இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி, பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகியோரின் கையில்தான் இந்தியாவின் இன்றைய வெற்றி உள்ளது. இன்றைய போட்டியில் நடப்பு இங்கிலாந்து தோல்வி அடைந்தால், அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற இயலாது