லக்னோ: உலக கோப்பை இன்றைய லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 229 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித் அரை சதம் அடித்தார்.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லக்னோவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இரு அணியிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய அணிக்கு சுப்மன், கேப்டன் ரோகித் ஜோடி துவக்கம் தந்தது. வோக்ஸ் பந்துவீச்சில் சுப்மன் (9) அவுட்டானார். வில்லே ‘வேகத்தில்’ கோஹ்லி டக் அவுட்டானார். ஸ்ரேயாஸ் 4 ரன்னில் திரும்பினார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரோகித் (87) அரை சதம் அடித்தார். ராகுல் 39 ரன் எடுத்தார். வில்லே பந்துவீச்சில் சூர்யகுமார் (49) ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 229 ரன் எடுத்தது. குல்தீப் (9) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வில்லே 3 விக்கெட் கைப்பற்றினார்.
230 ரன்களை இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி,34.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து இந்திய அணி 100 ரன்களில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணிக்கு 6 வது வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement