நாட்டின் கிரிக்கெட் களத்தில் புதிய அனுபவத்தை சேர்க்கும் வகையில், T-10 கிரிக்கெட் போட்டியின் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் நவம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த போட்டி டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இறுதிப் போட்டி அதே மாதம் 23 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியின் அனைத்து போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஆண்களுக்கான போட்டிக்கு நிகராக, உலகின் தலைசிறந்த பெண் வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளமை இந்தப் போட்டியின் தனித்துவமாகும்.
பிரதான போட்டியான ஆண்களுக்கான போட்டித் தொடரில் ஆறு அணிகள் பங்குபற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த அணிகள் இலங்கையின் பிரபலமான ஆறு நகரங்களைச் மையமாகக் கொண்டு தெரிவு செய்யப்படும் எனறும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
உரிய போட்டிகளுக்கு தெரிவு செய்வதற்கான வீரர்களின் பதிவு தற்போது ஆரம்பிக்கப்பட்டு;ள்ளதுடன், எதிர்வரும் 05ம் திகதி முடிவடையவுள்ளது. http://ttensports.com/ என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.