நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று வருடங்களாக தொழில்வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் 1500 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நேர்முகப் பரீட்சைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் 1500 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
அதற்கிணங்க குறித்த ஆட்சேர்ப்புத் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களுடன் நிதி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற (27) கலந்துரையாடலின் போது அமைச்சர் குறிப்பிட்டார்.
2021 ஜனவரரி மாதத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க குறித்த நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்றன. குடும்ப சுகாதார சேவைக்காக 2500 நியமனங்களை வழங்குவதற்காக அதில் 1000 பேர் வரை தற்போது பயிற்சி பெறுவதுடன் இன்னும் சிலர் மேலும் தொழிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சிக்கல் காரணமான அரசாங்க நியமனங்களை வழங்குகின்றமை இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்த நபர்கள் அதிக அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு சுட்டிக்காட்டினார்.
எனினும் சுகாதாரம் போன்ற விசேட முக்கியமான துறையை கவனத்திற் கொள்ளாதிருக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்குக் காணப்படும் வாய்ப்புக்களை தேடிப்பதாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குத் தெரிவித்தார். அதற்கிணங்க உலக வங்கி நிதியுதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் மற்றும் அவ்வாறே முடியாதுவிடின் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு மாற்று வழியொன்றை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
அரசாங்கத்திற்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்றவற்றிலும் அவசியமான வெற்றிடங்கள் காணப்படுவதுடன் அதை விடவும் முதன்மையானதாக சுகாதார சேவைக்காக ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.