வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய மாஜி துணை அதிபர் மைக் பென்ஸ் திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024 ஜனவரியில் துவங்குகிறது.
இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இதே கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் துணை அதிபரும், டெனால்ட் டிரம்ப்பின் நண்பருமான மைக் பென்ஸ் அறிவித்தார்.
திடீரென தாம் போட்டியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இது எனக்கான நேரம் அல்ல, எனது பிரச்சாரத்தை இன்று நிறுத்த முடிவு செய்துள்ளேன். என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement