ஜஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய பட அறிவிப்பு

தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும் சமீபகாலமாக முதன்மை கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார் ஜஸ்வர்யா ராஜேஷ் . இதில் சொப்பன சுந்தரி, பர்ஹானா, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் ஜஸ்வர்யா ராஜேஷ்-க்கு வரவேற்பை தரவில்லை.

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து ஜஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சவரி முத்து இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் துவங்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.