
கிரேட் காளியுடன் பாலா – வைரலாகும் வீடியோ
பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி, விளம்பர படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவி பிரபலமான காமெடியன் பாலாவுடன் சேர்ந்து 'நான் காலி' என்கிற குட் நைட் படத்தின் பாடலை பாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் முடிவில் அருகில் இருப்பவர் 'உங்களுடன் சண்டை போட விரும்புகிறார்' என்று சொல்ல அந்த ரொமாண்டிக்கான மூட் மாறி பாலா பதட்டமடைவது பார்ப்பதற்கே காமெடியாக இருக்கிறது. தற்போது அந்த வீடியோ படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.