அன்பே வா: `வெறும் குட் பை மட்டுமல்ல' – தொடரிலிருந்து விலகும் டெல்னா

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `அன்பே வா’. இந்தத் தொடரின் மூலம் தமிழ் சீரியல் உலகில் என்ட்ரியானவர் டெல்னா டேவிஸ். இவர் கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்.

கதாநாயகியாக இவர் அறிமுகமான முதல் தொடராக இருந்தாலும் இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவர் தொடரிலிருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக டெல்னா `அன்பே வா’ தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

`அன்பே வா’ டெல்னா

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ` டியர் அன்பே வா ஃபேமிலி, அன்பே வா தொடரிலிருந்து விடைபெறும்போது ஆழ்ந்த உணர்ச்சிகளாலும், நன்றியினாலும் என் இதயம் நிரம்பி வழிகிறது. இது வெறும் குட் பை மட்டுமல்ல உங்களுடைய அன்பிற்கும், நீங்கள் கொடுத்த அத்தனை நினைவுகளுக்கும் நன்றி! என்னுடைய வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக வாழ்நாள் முழுவதும் அன்பே வா கொடுத்த அழகான நினைவுகள் இருக்கும். `வருமிகா’ ரசிகர்களுக்கு, உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய அன்பு இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக ஆக்கியிருக்கிறது. 

புரொடக்‌ஷன் ஹவுஸ் சரிகம தமிழுக்கும், சன் டிவிக்கும் என்னுடைய நன்றி! என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர எனக்கொரு பிளாட்ஃபார்ம் உருவாக்கிக் கொடுத்தீர்கள். இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு பார்ட் ஆக இருந்ததைப் பெருமையாக நினைக்கிறேன். நினைவுகளுக்கு நன்றி! தொடர்ந்து உங்களது ஆதரவை `அன்பே வா’விற்குக் கொடுங்கள்!

`அன்பே வா’ டெல்னா

சைனிங் ஆஃப் பூமிகா!’ எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தத் தொடரில் இவர் பூமிகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடித்திருந்த விராட் நடித்துக் கொண்டிருந்தார். ஆன் ஸ்கிரீனில் வருண் –  பூமிகா என்கிற இந்த ஜோடிக்கு சமூகவலைதள பக்கங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள். பூமிகாவை மிஸ் செய்வதாக அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதள பக்கங்களில் கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.