கொச்சி, கேரளாவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பீஹாரைச் சேர்ந்த இளைஞர் குற்றவாளி என, போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்த, பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி அஷ்வக் ஆலம் என்பவர், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
இந்த சம்பவம், கடந்த ஜூலை 28ல் நடந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அஷ்வக் ஆலமை கைது செய்தனர்.
இந்த வழக்கில், 30 நாட்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எர்ணாகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி கே.சோமன், ”அஷ்வக் ஆலம் குற்றவாளி,” என, தீர்ப்பு அளித்தார்.
இதன்படி, சம்பவம் நடந்த 100 நாட்களுக்குள் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது. அஷ்வக் ஆலம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை விபரங்கள், வரும் 9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement