டில்லி வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் மலிவு விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் வெங்காய விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. எனவே கரீப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வெங்காயம், கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]
