Virat Kohli: ’விராட் கோலி எனும் பீனிக்ஸ்’ வீழ்வதை பார்க்க ஆசைப்பட்டவர்கள் மத்தியில் உயர பறப்பவர்!

விராட் கோலி, சச்சினின் புகழ் மேஜிக்கில் இந்திய கிரிக்கெட் உலகமே மூழ்யிருந்த நேரத்தில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். கிரிக்கெட்டுக்கு 11 பேரும் ஆட வேண்டும் என்று தெரிந்தாலும், யார் அடித்தாலும் பீல்டிங் செய்தாலும் அத்தனை பாராட்டுகளையும் சச்சினுக்கு மட்டுமே ரசிக்ரகள் சூட்டிக் கொண்டிருந்த நேரம். அவர் பெயர் இல்லாத ஒரு ரெக்கார்டை வேறொருவர் பெயரில் எழுதகூட விரும்பாத நேரத்தில் வந்த விராட் கோலி, அதனை பிறகு படைத்தது எல்லாம் சரித்திரம். இளம் பாலகனாக 2011 உலக கோப்பையில் விளையாடி முக்கியமான போட்டிகளில் தன்னுடைய முத்திரையை அழுத்தம் திருத்தமாக பதித்தார். அப்போது முதல் இப்போது வரை அவருடைய பேட்டிங்கில் ரன் இல்லாத போட்டிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

விராட் கோலி கையில் சிக்கும் பேட்டுகள் மட்டும் ரன் மெஷின்களாக மாற்றுவது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால் தான் இப்போதைய கிரிக்கெட் புத்தக்கத்தை எடுத்துப் பார்த்தால் பேட்டிங்கில் அவர் வசம் இல்லாத சாதனைகள் சொற்பம் என்ற அளவுக்கு வந்திருக்கிறது. இதுவரை படைக்க முடியாத சாதனைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தைக் கூட தன்னுடைய பேட்டிங்கின் மூலம் அந்த பக்கங்களையும் நிரப்பியிருக்கிறார் விராட் கோலி. இதுவரை அவர் படைத்திருக்கும் சாதனைகள் என்றால், சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விராட் கோலி அறிமுகமானதில் இருந்து அதிக ரன்கள் அடித்தவர், அதிக நூறு ரன்கள் விளாசியவர், அதிகமுறை 50 ரன்கள் விளாசியவர், அதிக முறை 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இருந்தவர், அதிக ஒருநாள் போட்டி ரன்கள், அதிக 20 ஓவர் போட்டி ரன்கள், அதிக முறை ஐசிசி விருதுகளை வென்றவர் என எண்ணற்ற சாதனைகளை படைத்துக் கொண்டே இருக்கிறார்.

 November 4, 2023

இதில் வேடிக்கை என்னவென்றால் விராட் கோலிக்கு பின்னால் இருப்பவர்களின் தொலைவை கணக்கிட்டால் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் தொலைவில் மற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இப்படி சாதனைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் விராட்கோலி இதற்காக பட்ட சோதனைகளை ஏராளம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோது அவரது தலைமையில் ஐசிசி கோப்பைகளை வெல்லவே இல்லை என்ற விமர்சனதுக்கு உள்ளாக்கப்பட்டார். எவ்வளவு திறமையாக ஆடினாலும் அவர் கேப்டனாக இருந்த ஆர்சிபி அணி ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்ற பெரிய குறை விராட் கோலிக்குள் இருக்கிறது. அதனை வைத்தே அவரை விமர்சிப்பவர்கள் ஏராளம். 

2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட்டில் கடினமான காலங்களை எதிர்கொண்ட விராட் கோலி, ஒருபோதும் தன்னுடைய நம்பிக்கையை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை. சதமே அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அந்த நேரத்தில் இருந்தபோது ஆஸ்திரேலியாவில் அதிரடியாக ஆடி பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டிக்கு முன்பு வரை விராட் கோலி ரன்கள் அடித்தால் கூட விமர்சனத்தை எதிர்கொண்டார். விராட் கோலியை விரும்புவர்களைவிட அதிக ஹேட்டர்ஸே இருந்தனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் தன்னுடைய கிரிக்கெட்டை மட்டும் விளையாடிக் கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் ஆக்ரோஷத்துடன் இருந்த அவரிடம் இப்போது புன்னகையை மட்டும் இப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விராட் கோலி வீழ வேண்டும் என ஆசைப்பட்டவர்கள் மத்தியில் எப்போதும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து உயர உயர பறந்து கொண்டே இருந்தார் விராட் கோலி. 

 November 5, 2023

தனிப்பட்ட சாதனைகளுக்கு அவர் ஒருபோதும் விளையாடியதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் சேஸிங்கின்போது அதிக ரன்கள் அடித்தவர், அதிக சதம் மற்றும் அரைசதங்கள் விளாசியவர் என்ற சாதனையும் இவர் வசமே இருக்கிறது. அணி தன்னிடம் எதிர்பார்க்கும்போதெல்லாம், அதனை ஒருபோதும் நிராசையாக்கியவரில்லை விராட்…… இந்த உலக கோப்பை கனவும் அவர் வசமாகட்டும் என இப்பிறந்தாளில் வாழ்த்துவோம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.