செல்ஃபி பிரியரா நீங்கள்… அட்டகாசமான மொபைல்கள் அதிரடி தள்ளுபடியில் – இதை பாருங்க

Smartphones In Amazon Sale 2023: ஸ்மார்ட்போன்கள் முதல் ஸ்மார்ட் டிவிகள் வரை பல பொருட்களுக்கு பம்பர் தள்ளுபடியை அமேசான் நிறுவனம் வழங்கியது. மக்கள் இந்த பண்டிகை காலத்தில் தள்ளுபடிகள் மற்றும் பல சலுகைகளுடன் பொருட்களை மலிவாக வாங்க விரும்புவார்கள். கடந்த அக்டோபர் மாதம் முதல் விற்பனை நடந்து வருகிறது. இருப்பினும், இந்த தள்ளுபடி எந்த நேரத்திலும் நிறைவு பெறலாம்.

வங்கி + கூப்பன் தள்ளுபடி

அந்த வகையில், அமேசான் இந்த விற்பனையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில், ஸ்மார்ட்போன் வங்கி தள்ளுபடிகளுடன், கூப்பன் தள்ளுபடிகளும் உள்ளன. ஸ்மார்ட்போன்களை மாதத் தவணையிலும் நீங்கள் வாங்கலாம். 

ஸ்மார்ட்போனில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இன்று நாம் 16MP செல்ஃபி கேமரா கொண்ட போன்களில் கிடைக்கும் தள்ளுபடிகளை நீங்கள் பெறலாம். அதுகுறித்து இங்கு காணலாம். மேலும், இந்த ஸ்மார்ட்போன்களை மாதாந்திர தவணையிலும் அமேசான் விற்பனையில் வாங்கலாம். மேலும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Vivo Y56 5G

Vivo நிறுவனம் ஸ்மார்ட்போனில் 16MP செல்ஃபி கேமரா மற்றும் 50MP பிரதான பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.58 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. ஸ்மார்ட்போன் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடியில் 14 ஆயிரத்து 999 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. இதன் அசல் விலை 16 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அமேசான் விற்பனையில் பாங்க் ஆப் பரோடா கார்டுகளுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி உள்ளது.

OnePlus Nord CE 3 Lite 5G

OnePlus நிறுவனத்தின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் 16MP முன் கேமராவுடன் 108MP பிரதான பின்புற கேமராவும் உள்ளது. ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த கைபேசியில் Qualcomm Snapdragon 695 5ஜி பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. OnePlus நிறுவனத்தின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 67W SUPERVOOC சார்ஜிங்குடன் 5000mAh உடன் வருகிறது. இது 8 ஜிபி RAM உடன் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதன் விலை 19 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்டுக்கு ரூ.750 தள்ளுபடி உண்டு.

iQOO Neo 7 Pro 5G

iQOO நிறுவனத்தின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் உள்ளது. இந்த போனில் Snapdragon 8+ Gen 1 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது 120W ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதில் 50MP பிரதான கேமரா மற்றும் 16MP முன்பக்க செல்ஃபி கேமரா உள்ளது. அமேசான் தள்ளுபடி விற்பனையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.32 ஆயிரத்து 999 முதல் தொடங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடி உண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.