ராஜாஜி நகர் : தனியார் வணிக வளாக வழக்கில் ‘டுவிஸ்ட்’ ஏற்பட்டுள்ளது. எட்டு பெண்களுக்கு, ஓய்வு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு ராஜாஜிநகரில் தனியார் வணிக வளாகம் உள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி பசவேஸ்வரா நகரில் வசிக்கும், ஓய்வுபெற்ற தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் அஸ்வத் நாராயண், 60, என்பவர், வணிக வளாகத்தில் வைத்து, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, நீதிமன்றத்தில் அஸ்வத் நாராயண் சரண் அடைந்தார். அவருக்கு ஜாமினும் கிடைத்தது. இந்நிலையில் வணிக வளாகம் முழுதும் பொருத்தப்பட்டு உள்ள 45 கண்காணிப்பு கேமராக்களில், சம்பவம் நடந்த அன்று பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அன்றைய தினம், வணிக வளாகத்தில் மூன்று மணி நேரம் சுற்றித்திரிந்த அஸ்வத் நாராயண், இளம்பெண்ணை தவிர மேலும் எட்டு பெண்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. தலைமை ஆசிரியராக பணியாற்றியபோது, மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement