Speech by King Charles III to the British Parliament | பிரிட்டன் பார்லிமென்ட்டில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கன்னி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: மன்னராக முடிசூட்டிய பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், முதன்முறையாக பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தி கூட்டத் தொடரை துவக்கி வைத்தார்.

பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வால் காலமானார். இதனையடுத்து எலிசபெத் மகன் மூன்றாம் சார்லஸ்,74 மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கடந்த மே மாதம் முடிசூட்டினார்.

இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடியது, இதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி பங்கேற்று பாராளுமன்ற கூட்டத்தொடரை துவக்கிவைத்து உரையாற்றினார். மூன்றாம் சார்லஸூடன் அவரது மனைவி கமீலாவும் உடனிருந்தார்.

முன்னதாக மறைந்த தனது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு புகழாரம் சூட்டி பேசினார். நமது ஜனநாயகத்தின் உயிர் மற்றும் சுவாசக் கருவியாக இப்பாராளுமன்றம் உள்ளது என்றார்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.