சூரத்:கடற்படைக்காக கட்டப்பட்டு வரும் ஏவுகணை ஏந்திய, ‘சூரத்’ என பெயரிடப்பட்டுள்ள போர்க்கப்பலுக்கான சின்னம் வெளியிடப்பட்டது.
நம் கடற்படைக்காக, சூரத் என்ற பெயரில் ஏவுகணை ஏந்திய போர்க் கப்பல் கட்டப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உல்ள மாசோகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில், இது தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் இது பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரின் பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கப்பலுக்கான சின்னம் அறிமுக விழா சூரத் நகரில் நேற்று முன் தினம் நடந்தது.
பா.ஜ.,வைச் சேர்ந்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், கடற்படை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சூரத்தின் ஹாசிராவில் உள்ள கலங்கரை விளக்கம், ஆசிய சிங்கம், கடல் அலைகள் இந்த சின்னத்தில் இடம்பெற்றுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement