வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கேள்வி கேட்க லஞ்சம் தொடர்பான விவகாரத்தில் திரிணாமுல் காங்., பெண் எம்.பி.,மஹுவா மொய்த்ரா பதவியை பறிக்க பார்லி., நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா, 49; அந்த மாநில கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.
இவர், பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., — எம்.பி., நிஷிகாந்த் துபே சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை, மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி திட்டவட்டமாக மறுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து பார்லி., நிலைக்குழு விசாரித்து வருகிறது.இக்குழு தனது 500 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும், அதில் மஹூவா மொய்தா மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. இனியும் அவர் லோக்சபா பதவியில் நீடிப்பது சரியல்ல, பதவியை பறிக்க வேண்டும் என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement