சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து சென்னை அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள பிரபல சாய்பாபா கோவில் மற்றும் சென்னை அருகே அட்டை பெட்டி நிறுவனம் உள்பட பல இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். சென்னையில் உள்ள மயிலாப்பூர் சாய்பாபா கோயிலின் மேற்கூரையில் நேற்று (நவம்பர் 12) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து […]
