பாடசாலை கிரிக்கட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மாகாண மட்டத்தில் கிரிக்கட் போட்டிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும்,இந்த நிதி வசதிகளை வழங்கும்போது, வசதிகள் குறைந்த பாடசாலைகள் மற்றும் மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.