Hamas Has Lost Control In Gaza, Says Israel Defence Minister | காசா நகர கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ்: இஸ்ரேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காசா: இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் 39 நாட்களை கடந்த நிலையில், ‛‛ காசா நகர் மீதான கட்டுப்பாட்டை ஹமாஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் இழந்துவிட்டதாக” இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலாண்ட் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: காசாவின் அனைத்து திசைகளை நோக்கியும் ராணுவம் முன்னேறி வருகிறது. இதனால், பயங்கரவாதிகள் தப்பி செல்கின்றனர். இஸ்ரேல் விமானப்படைடை ஹமாஸ் பயங்கரவாதிகளால் தடுக்கவில்லை.

விமானப்படையும் முன்னேறுகிறது. காசா நகரின் கட்டுப்பாட்டை இழந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பி செல்கின்றனர். இதனால் ஹமாஸ் தளங்களில் உள்ளவற்றை மக்கள் கொள்ளையடித்து வருகின்றனர். தங்களின் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.