புதுடில்லி, உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா அருகே, புதுடில்லி – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பிடித்ததில் மூன்று பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
புதுடில்லியில் இருந்து பீஹாரில் உள்ள தர்பங்கா நகருக்கு நேற்று பயணியர் சிறப்பு ரயில் சென்று கொண்டிருந்தது. உ.பி.,யின் எட்டாவா அருகே சராய் போபத் ரயில் நிலையம் அருகே சென்றபோது, எஸ் -1 பெட்டியில் திடீரென புகை வந்தது. தீ மளமளவென அடுத்த இரண்டு பெட்டிகளுக்கு பரவியது. இதனால் பயணியர் பீதியடைந்தனர்.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணியர் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement