வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அயோத்திக்கும் நேபாளத்திற்கும் இடையே மிக வலுவான தொடர்பு உள்ளதாக இந்தியாவுக்கான நேபாள தூதர் டாக்டர் ஷங்கர் பிரசாத் சர்மா கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ல் நடைபெறும் என கட்டுமான குழு அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
இந்த விழாவில் பங்கேற்க, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடு வாழ் இந்தியர்களும் பங்கேற்கும் வகையில், 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான நேபாள தூதர் டாக்டர் ஷங்கர் பிரசாத் சர்மா கூறியதாவது: அயோத்திக்கும் நேபாளத்திற்கும் இடையே மிக வலுவான தொடர்பு உள்ளது. இப்போதும் கூட ஒவ்வொரு ஆண்டும் அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனக்பூர் வரை ஊர்வலம் நடக்கிறது. எதிர்வரும் நாட்களில் நேபாளத்தில் இருந்து பலர் அயோத்திக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement