சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம், சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம், கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நவ.20-ம் தேதி ( நாளை ) காலை 10 மணிக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர், தலைமை நிலையச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், கருத்தியல் பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பர்.