குஜராத்தின் மெஹுசான பகுதியில் கோயில் நிகழ்ச்சியின்போது, ஹீலியம் பலூன் வெடித்ததில் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் சுமார் 25 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவமானது, உஞ்சா தாலுகாவிலுள்ள பிரம்மன்வாடா கிராமத்தில் அரங்கேறியிருக்கிறது.

இதில், விநாயகர் கோயில் நிகழ்ச்சியில் கோயிலுக்கு வெளியே பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து வந்த தீ பொறிகள், வழிபாடு முடிந்ததும் வானில் பறக்க விடுவதற்காக சிறுமிகள் பிடித்திருந்த ஹீலியம் பலூன்களில் பட்டு விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்து ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இது குறித்து உஞ்சா எம்.எல்.ஏ கிரித் பட்டேல், “வழிபாடு முடிந்தவுடன் ஹீலியம் பலூன்களை வானில் பறக்க விடுவதற்காக கோயிலுக்கு வெளியே சிறுமிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பலூன்களை பறக்க விடுவதற்கு முன்பு, யாரோ பட்டாசுகளைப் பற்ற வைத்ததால் அவை வெடித்து அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி ஹீலியம் பலூன்களில் பட்டதால் பலூன்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சிறுமிகள் சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
Gujarat Balloons Blast Video I Over 25 Girls Sustain Burn Injuries as Helium Balloons Explode Outside Temple in Mehsana yesterday …#Mehsana #Gujarat #BalloonBlast #Explosion #Heliumgas #injured #temple pic.twitter.com/Xo2azNPZwV
— mishikasingh (@mishika_singh) November 19, 2023
காயமடைந்த சிறுமிகள் உடனடியாக மருத்துவமனைக்கு முதல் கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக மெஹுசான மருத்துவமனைக்கு சிறுமிகள் கொண்டு செல்லப்பட்டனர்” என்று கூறினார். இன்னொருபக்கம், காயமடைந்த சிறுமிகளுக்கு சிறிய அளவிலான தீக்காயங்கள் இருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தெடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.