சீனிவாசப்பூர் : ”சீனிவாசப்பூர் தொகுதியில் வேலை வாய்ப்பை உருவாக்க 3,000 ஏக்கரில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்,” என, சீனிவாசப்பூர் தொகுதி ம.ஜ.த., – எம்.எல்.ஏ., வெங்கட் ஷிவா ரெட்டி தெரிவித்தார்.
சீனிவாசப்பூரின் மாருதி சேவா பவனில் தாலுகா நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் குறைதீர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கிராமப் பகுதிகளில் ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த, எல்லடூரில் 1,000 ஏக்கரிலும், மதனபள்ளி சாலையில் 2,000 ஏக்கரிலும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்.
வேம்கல், நரசாப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் போல் அமைக்கப்படும்.
நகரில் மற்றும் கிராமங்களில் பட்டா முறைகேடு விவகாரம் பெரும் பிரச்னையாக உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா தீர்வு காண வேண்டும்.
கோலார் — சீனிவாசப்பூர் சாலை அகலப் படுத்தும் பணிகள் குறித்து, கோலார் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 40 கோடி ரூபாய் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
நரேகா திட்டத்தில் பள்ளி காம்பவுண்ட், கழிப்பறை, விளையாட்டு மைதானங்கள் சீரமைக்க அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் வழங்க பணிகள் நடந்து வருகின்றன. 2024 மார்ச் 31க்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீனிவாசப்பூரில் பழுதடைந்துள்ள குடிநீர் மையங்களை சீரமைத்து, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement