வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பார்சிலோனா: கடந்த 2010 உலக கோப்பை கால்பந்து போட்டி தீம்சாங் பாடிய பாடகி ஷகீரா மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டு இறுதி கட்ட விசாரணையில் உள்ளது. இதனால் அவர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார்.
கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் பாடகி ஷகீரா (46 வயது). இவர் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டவர். 2010 உலக கோப்பை கால்பந்து போட்டி பாடல் உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்று தந்தது. இவர் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்து அங்கு வசிக்க துவங்கினார். ஒரு கம்பெனியை துவக்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் இவர் 15.7 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு இறுதி விசாரணையில் ஷகீரா புரிந்த குற்றத்திற்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் இவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷகீரா, 2012 முதல் 2014 வரை சர்வதேச அளவில் சென்ற நிகழ்ச்சி மூலமாகத்தான் வருமானம் கிடைத்தது. ஸ்பெயினுக்கு ஷகீரா 2015ல் தான் வந்தார் என்றும் இந்த வழக்கு செல்லாது என்றும் வாதிட்டுள்ளார்.
நேற்று உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் உலக கால்பந்து போட்டிக்கு பாடிய ஷகீரா வழக்கு உலகம் முழுவதும் நெட்டின்சன்களால் அதிகம் பகிரப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement