சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி.யான அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் குமரன் வீடியோ வெளியிட்ட நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரவுண்டு கட்டி ரெய்டுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக […]
