பிடுகுரல்லா, ஆந்திர மாநிலம் பால்நாடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ், 32. இவரது இரண்டாவது மனைவி மாதுரி, 26. இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார்.
பட்டதாரியான நரேஷ், தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நரேசின் தந்தை சாம்பசிவராவ், தாய் ஆதி லட்சுமி.
வயல் வேலைக்கு வராத மனைவி மாதுரியுடன், நரேஷ் நேற்று முன்தினம் சண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால், மாதுரி இது குறித்து தன் சகோதரர் சீனிவாச ராவ் மற்றும் தந்தை சுப்பாராவ் ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்தார்.
கத்தியுடன் அவர்கள் வந்துள்ளனர். அப்போது மாதுரியின் கழுத்தை, நரேஷ் நெரித்துள்ளார். கோபம்அடைந்த சீனிவாச ராவ், மைத்துனர் நரேஷ் மற்றும் அவரது பெற்றோர் சாம்பசிவ ராவ், ஆதி லட்சுமியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நரேஷ் உட்பட மூவரும் உயிரிழந்தனர்.
தப்பியோடிய சீனிவாச ராவ் மற்றும் அவரது தந்தை சுப்பாராவை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement