வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘பத்திரிகைகளில் வந்த செய்தி மற்றும் ஒரு அமைப்பு வெளியிட்ட அறிக்கைகளைவேதவாக்காக எடுத்துக் கொள்ள முடியாது. இதை வைத்து பொறுப்பற்ற முறையில் பொதுப்படையான புகார்களை கூறக் கூடாது’ என, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின், ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் அமைப்பு ஆகியவை, அதானி குழுமம் மீது பல புகார்களை கூறின.
இது தொடர்பாக, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு விசாரித்தது. மேலும், செபி அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்நிலையில், இந்த விசாரணைகள் தாமதமாவதாக, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
இந்த அமைப்புகள் கூறியுள்ள புகார்களை, வேதவாக்காக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் யாருக்கும் நடத்தை சான்றிதழ் அளிக்கக் கூடாது. பொதுப்படையான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைக்கக் கூடாது.
இந்த அமைப்புகள் கூறிய புகார்கள் குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தால், அதை வைத்து குற்றம் நடந்துள்ளது என்று கூற முடியுமா? எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், இந்த விவகாரத்தில், செபி எப்படி செயல்பட முடியும்?பத்திரிகை செய்திகளை மட்டும் ஆதாரமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவை நம்பதக்கதா என்பதை எப்படி உறுதி செய்ய முடியும்?ஆதாரங்கள் உள்ளதாக கூறும் நீங்கள், அதை ஏன் காட்டவில்லை?
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement