‘அப்பாடா தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுட்டு வருது…நாமளும் கொஞ்சம் கொஞ்சமா தங்கம் வாங்கி வெச்சுடலாம்’ என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், தங்கம் விலை தாறுமாறாக எகிறி அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

‘இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.62,000-த்தை தொடும்’ என்று பொருளாதார நிபுணர்கள் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், ஜூலை மாதம் முதல் தங்கம் விலை சற்று குறைய ஆரம்பித்து ரூ.42,000 வரை சென்றது. ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் ஆரம்பித்த அக்டோபர் 7-ம் தேதியே தங்கம் விலை காலை, மாலை என ஏறி மீண்டும் எகிற ஆரம்பித்தது.
கடந்த மே மாதம் 4-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,750 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.46,000 ஆகவும் விற்பனை ஆனது. அதுவரையில் அதுதான் தங்கம் விலையிலேயே மிகப்பெரிய உச்சமாக இருந்தது. அதன்பிறகு ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,775 வரையும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.46,200 வரையும் சென்றது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,735-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.45,880-க்கும் விற்பனை ஆனது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.5,755-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.46,040-க்கும் விற்பனை ஆகி வருகிறது. கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ரூ.46,000-த்தை தொட்டிருக்கிறது.