மூணாறு:கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ., தூரம் ரோடு இருவழிச் சாலையாக ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டது. அந்த வழியில் வாகனங்கள் சென்று வரும் நிலையில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்கரி ஆக.,17, அக்.,12, நவ.,6ல் அதிகார பூர்வமாக ரோட்டை திறந்து வைப்பதாக இருந்தபோதும் மூன்று முறையும் தடைபட்டது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் இடுக்கி மாவட்டத்தில் முதன் முதலாக லாக்காடு எஸ்டேட் குருசடி பகுதியில் தேவிகுளம் டோல் பிளாசா என்ற பெயரில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி நாளை (நவ.,27) காலை 8:00 மணி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
கட்டணம்: கார், ஜீப் உள்பட சிறிய ரகவாகனங்கள் ஒரு புறம் செல்ல ரூ.35, இருபுறம் வந்து செல்ல ரூ.55, ஒரு மாதம் இருபுறமும் வந்து செல்ல ரூ.1195. மினி பஸ் ஒரு புறம் ரூ.60, இரு புறம்பான ரூ.85, மாதம் ரூ.1930. பஸ், டிரக் வாகனங்கள் ஒரு புறம் ரூ.120, இருபுறம் ரூ.180, மாதம் ரூ.4045, தொழில் தொடர்பான வாகனங்கள் ஒரு புறம் ரூ.130, இருபுறம் ரூ.200, மாதம் ரூ.4415. சரக்கு வாகனங்கள் ஒரு புறம் ரூ.190, இருபுறம் ரூ.285, மாதம் ரூ.6345. ஏழுக்கும் மேற்பட்ட அச்சுகள் கொண்ட கன ரக வாகனங்கள் ஒரு புறம் ரூ.230, இருபுறம் ரூ.345, மாதம் ரூ.7720.
சுங்கச் சாவடியில் இருந்து 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் வணிகம் சாராத வாகனங்களின் உரிமையாளர்கள் மாதம்தோறும் ரூ.330 செலுத்தி பயணிக்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement