நெலமங்களா : ரயில் விபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நெலமங்களா ரயில் நிலையத்தில் என்.டி.ஆர்.எப்., எனும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நடத்தினர்.
தென்மேற்கு ரயில்வே பெங்களூரு பிரிவு சார்பில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், ரயில்வே பிரிவு அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை துறைகளின் ரயில்வே ஊழியர்கள், என்.டி.ஆர்.எப்., ‘108’ ஆம்புலன்ஸ் 30 பேர் மீட்புப் பணியாளர்களாக பங்கேற்றனர்.
இதேவேளையில், அருகில் மருத்துவ முகாம், உபகரண கூடாரங்கள் அமைத்து, மீட்கப்பட்ட பயணியருக்கு சிகிச்சை அளித்தனர்.
மீட்புப் பணி ஒத்திகையை சிறப்பாக செய்தவர்களை, பெங்களூரு பிரிவு கூடுதல் ரயில்வே மேலாளர் நவெய்த் தாலிப், முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத், என்.டி.ஆர்.எப்., துணை கமாண்டென்ட் அகிலேஷ் குமார் பாராட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement