தங்கவயல் : கோலார் மாவட்டத்தில் ஐந்து அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், டயாலிசிஸ் ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.
கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., அரசு மருத்துவமனை, தங்கவயல், மாலுார், முல்பாகல், சீனிவாசப்பூர் தாலுகா அரசு மருத்துவமனைகளில் சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் டயாலிசிஸ் மையங்கள் உள்ளன.
இங்கு இயந்திரங்களை இயக்க தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஊழியர்கள் 18 பேர் வேலை செய்து வந்தனர்.
இந்த அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் நோயாளிகள், மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, சம்பள பிரச்னைக்காக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை வைக்காமல் சம்பளம் வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதியளித்தன. ஆனாலும் வழங்கப்படவில்லை.
இதனால், கடந்த வியாழன் முதல், மாவட்டத்தில் உள்ள ஐந்து டயாலிசிஸ் சென்டர்களிலும் பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. நோயாளிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.
பலரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கும், தினமும் சிகிச்சை பெறுவோருக்கு தான், சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தங்கவயல் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்த ஐந்து நோயாளிகள், மருத்துவமனை இருக்கையிலேயே அமர்ந்து விட்டனர். சிகிச்சை இல்லாமல் வாழ முடியாது; நாங்கள் இறப்பதாக இருந்தால், இங்கேயே இறந்து விடுகிறோம் என்று நோயாளிகள் கண்ணீருடன், தலைமை மருத்துவரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தங்கவயல் அரசு மருத்துவமனை அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ் குமார் கூறியதாவது:
டயாலிசிஸ் ஊழியர்கள் பிரச்னை தங்கவயலில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள பிரச்னை.
ஏற்கனவே இருந்த ஒப்பந்ததாரரை ‘பிளாக் லிஸ்ட்’ செய்து விட்டு புதிதாக ஒப்பந்ததாரரை அரசு நியமித்துள்ளது. புதியவர்கள் பொறுப்பு ஏற்க, ஓரிரு மாதங்களுக்கு மேலாகும். ஊழியர்களுக்கு, பழைய ஒப்பந்ததாரர் இரண்டு லட்சம் ரூபாய் வரை, நிலுவை தொகை வழங்க வேண்டும்.
இதனை பெறாமல், வேலைக்கு வர முடியாது என ஊழியர்கள் கூறுகின்றனர். புதியவர்களை, நியமிக்க முடியாது. இதற்காக பயிற்சி பெற்றவர்கள் தான் கவனிக்க முடியும்.
நோயாளிகள் பாதிப்பு குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தங்கவயல் அரசு மருத்துவமனை அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ் குமார் கூறியதாவது:
டயாலிசிஸ் ஊழியர்கள் பிரச்னை தங்கவயலில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள பிரச்னை. ஏற்கனவே இருந்த ஒப்பந்ததாரரை ‘பிளாக் லிஸ்ட்’ செய்து விட்டு புதிதாக ஒப்பந்ததாரரை அரசு நியமித்துள்ளது. புதியவர்கள் பொறுப்பு ஏற்க, ஓரிரு மாதங்களுக்கு மேலாகும். ஊழியர்களுக்கு, பழைய ஒப்பந்ததாரர் இரண்டு லட்சம் ரூபாய் வரை, நிலுவை தொகை வழங்க வேண்டும்.
இதனை பெறாமல், வேலைக்கு வர முடியாது என ஊழியர்கள் கூறுகின்றனர். புதியவர்களை, நியமிக்க முடியாது. இதற்காக பயிற்சி பெற்றவர்கள் தான் கவனிக்க முடியும். நோயாளிகள் பாதிப்பு குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் சுரேஷ் குமார்,
தலைமை மருத்துவர்,
அரசு மருத்துவமனை தங்கவயல்.
ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். இடம்: தங்கவயல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்