கிரிக்கெட விளையாட்;டுக்கு நீண்ட கால தீர்வை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் தயாரிக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் ஆளும் கட்சியில் இருந்து விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;.
இந்த நீண்டகால வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் அமைச்சரவை உபகுழுவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், கிரிக்கெட் தடையை நீக்குவது தொடர்பாக ஐசிசியுடன் ஆலோசித்து விரைவில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்; கூறினார்.
இலங்கை கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கையில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக பல புதிய முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்; சுட்டிக்காட்டினார்.