
மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல்
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், அது வசூலில் எதிரொலிக்கவில்லை.
இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 116 கோடி வசூலித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களில் ரூ. 236 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்தனர். இதனால் முதல் நாள் வசூலை விட இரண்டாம் வசூல் சற்று அதிகமாக இருந்தது. தொடர்ந்து மூன்று நாளில் இப்படம் உலகளவில் ரூ.356 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.