
மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு
நடிகர் அஜித்குமார் தற்போது தனது அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இதனை மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.
கடந்த வாரத்தில் படப்பிடிப்பிற்கு இடைவேளை விட்டு சென்னை திரும்பிய அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் இப்போது மீண்டும் அஜித் உள்ளிட்டோர் அஜர்பைஜானுக்கு திரும்பியுள்ளனர். இதற்காக ஏர்போர்ட் சென்ற அஜித் ரசிகர் ஒருவருடன் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.