Formula 4 Car Race: வெள்ளம் சூழ்ந்த தலைநகரம்… கார் பந்தயத்தை ஒத்திவைத்த தமிழக அரசு!

டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளை, மிக்ஜாம் புயல் மற்றும் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் பாதிப்புகள், மீட்புப் பணிகள் காரணமாக ஒத்திவைப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

கார் பந்தயம்

முன்னதாக, தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில், அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை இரவுப் போட்டியாக, ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளை டிசம்பர் 9, 10-ல் நடத்துவதாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது.

சென்னை

இதற்காக, அரசு தரப்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதேசமயம், விளையாட்டுத்துறையின் இத்தகைய முன்னெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளும் வந்தது. குறிப்பாக, “சென்னையில் மழை பாதிப்புக்கு இடையே கார் பந்தயம் அவசியமா… ஏழைகளுக்குப் பணம் ஒதுக்காமல், பணக்காரர்கள் பார்க்கும் கார் பந்தயத்துக்குப் பணம் ஒதுக்குவது முக்கியமா…” என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுவொருபுறமிருக்க, மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த கனமழையால் தலைநகரம் தண்ணீரில் மிதக்கிறது. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது. பேரிடர் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை பாதிப்புகள், மீட்புப் பணிகள் காரணமாக கார் பந்தயத்தை ஒத்திவைப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அறிக்கை

அந்த அறிக்கையில், “மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.