வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: பைக்கில் மோதி தனது காரை சேதப்படுத்திய நபரை முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகள் சகட்டு மேனிக்கு திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா, இவர் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரது மனைவி பவானி ரேவண்ணா.
சம்பவத்தன்று இவர் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம், தனது சொந்த ஊரான சாலைகிராமத்திற்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே பைக்கில் வந்த நபர் எதிர்பாராதவிதமாக பவானி ரேவண்ணா வந்த கார் மீது மோதியதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. பைக்கில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே காரை விட்டு இறங்கிய பவானி ரேவண்ணா, ஆத்திரத்தில் பைக்கில் வந்த நபரை ‛ நீ சாவதற்கு எனது கார் தான் கிடைச்சதா, நீ சாக வேண்டியிருந்தா ….எங்காவது பஸ்சில் மோதி சாக வேண்டியதானே என சகட்டு மேனிக்கு திட்டியதுடன், கார் என்ன விலை தெரியுமா ரூ. 1.50 கோடி. எனது கார் சேதமானதுக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கொடு என கேட்டு மிரட்டியுள்ளார். இச்சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது. பைக்கில் வந்த நபரை பிரதமர் மருமகள் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement