சென்னை மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நடிகை நமீதா இரு குழந்தைகளுடன் தவிக்க நேர்ந்துள்ளது. நேற்று முன் தினம் மாலையிலிருந்து நேற்று இரவு வரை மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் விடாது மழை பெய்தது. இந்த கனமழை காரணமாகச் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் அதிகரிப்பால் பள்ளிக்கரணை நாராயண புரம் ஏரியின் கரை உடைந்தது. எனவே அதற்கு அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இன்னும் பள்ளிக்கரணை, அதன் அருகில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்து ஆறு […]
