ஹைதராபாத், தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியை, 54, காங்., மேலிடம் தேர்வு செய்துள்ளது. நாளை அவர், முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
தெலுங்கானா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 64 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. புதிய முதல்வராக மாநில காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.
கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது.
தெலுங்கானா காங்., தலைவராக ரேவந்த் ரெட்டி, 2021ல் பொறுப்பேற்ற போதே, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை
ஆனால், காங்., – எம்.பி., ராகுல் மற்றும் பிரியங்காவின் ஆதரவு ரேவந்த் ரெட்டிக்கு இருந்தது.
இந்நிலையில், ஐதராபாதில் நடந்த காங்., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ரேவந்த் ரெட்டி, கட்சியின் சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக, காங்., பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இதையடுத்து, தெலுங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி, இன்று பதவியேற்கவுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement