அடுத்த வருட இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ நேற்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் காணி அமைச்சின் செலவீன தலைப்புகள் மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 04 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
இவ்வருடம், இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், எதிர்வரும் 10ஆம் திகதி மேலும் 03 சுற்றுலாக் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன. அந்த 03 கப்பல்களில் மட்டும் 5000 சுற்றுலாப் பயணிகள் வர உள்ளனர். தற்போது நாளொன்றுக்கு சுமார் 6000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறை மிகவும் மகிழ்ச்சியான இலக்கை நோக்கிய துறையாகும். 2022ஆம் ஆண்டில் 700,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வருகை தந்தனர். தற்போது அந்த தொகை அதிகரித்துள்ளது. இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் 33 வீதமானோர் மீண்டும், முண்டும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள். கடந்த திங்கட்கிழமை புதிய பயண ஊக்குவிப்பு திட்டம் ஒன்று ஆரம்பிக்கபட்டது.
உறுமய திட்டத்தின் கீழ் 02 மில்லியன் மக்களுக்கு இலவசப் காணி உறுதிப பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். புதிதாக 134 சர்வேயர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.