வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் தேதி அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் 2024-ல் நிறைவடைகிறது.
இந்நிலையில் ரஷ்ய பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடத்துவது என முடிவு செய்து சபை தலைவர் வேலண்டினா மேட்டிவியங்கோ தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் மீது பெடரேசன் கவுன்சில் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 162 பேர் வாக்களித்தனர். பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement