சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாவலசிரியை மீரா சந்த். இவருக்கு அந்நாட்டின் கலைத்துறையில் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான சிங்கப்பூரில், கலை, பண்பாட்டை வளர்க்கும் நோக்கத்தில், அந்நாட்டின் முன்னாள் அதிபரான ஓங் டெங்க் செங்க், தேசிய கலாசார மையத்தை 1979ல் துவக்கினார்.
இந்த அமைப்பு சார்பில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் கலாசார விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த விருது, கலாசார துறையில் வழங்கப்படும் அந்நாட்டின் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாவலாசிரியை மீரா சந்த், 81, சிங்கப்பூரைச் சேர்ந்த நாவலாசிரியை சூசன் கிறிஸ்டைன் லிம், நடனக் கலைஞர் ஓஸ்மான் அப்துல் ஹமீது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மூவருக்கும், அந்நாட்டின் அதிபர் தருமன் சண்முகரத்னம் விருது வழங்கி கவுரவித்தார். விருது பெற்றவர்களுக்கு இந்திய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement