சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில், 5வது நாளாக நாளையும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. முக்கிய பகுதிகளில் உள்ள வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், உள்பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாத நிலை உள்ளது. இதனால் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாத நிலையில், பல பகுதிகளில் மக்கள் நிவாரண உதவிக்கேட்டு போராடி […]
