புதுடில்லிஎதிர்க்கட்சிகளின், ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம், புதுடில்லியில் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த, 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இதில் காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்று உள்ளன. இந்த கூட்டணி யின் நான்காவது கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடப்பதாக இருந்தது. கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் பங்கேற்காத சூழலில், அந்த கூட்டம் இம்மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, வரும் 17 முதல் 20 தேதிகளில் இந்த கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் குறிப்பாக இட பங்கீடு குறித்து பேச்சு நடத்த, கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட, இட பங்கீடு அவசியம் என்பதால், அது தொடர்பாக முடிவெடுக்க காங்கிரசிடம் வலியுறுத்த, கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement