Flipkart Big Year End Sale: மலிவான விலையில் போன், டிவி, லேப்டாப்.. சலுகை, தள்ளுபடி விவரங்கள்

Flipkart Year End Sale Offers: பிளிப்கார்ட் தனது தளத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையான பிக் இயர் எண்ட் சேல் (Flipkart Big Year End Sale) அறிவித்துள்ளது. இந்த விற்பனை டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருக்கும். உங்களிடம் Flipkart Plus மெம்பர்ஷிப் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் அதாவது இன்று (டிசம்பர் 8) முதல் பிக் இயர் எண்ட் சேல் விற்பனையின் கீழ் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை விலையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த விற்பனையில் குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் மீது அதிகப்படியான சலுகைகள் கிடைக்கும். பிக் இயர் எண்ட் சேல் மூலம் என்னென்ன பொருட்களுக்கு டீல்ஸ் மற்றும் ஆஃபர் (Flipkart Deals and Offers) கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 50% முதல் 80% வரை தள்ளுபடி

பிளிப்கார்ட் விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும். பிக் இயர் எண்ட் சேல் விற்பனையில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடியில் வாங்கலாம். இது தவிர, ஹெட்ஃபோன்கள், மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள் உட்பட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடிகள் கிடைக்கும்.

எந்தெந்த ஸ்மார்ட்போனுக்கு சலுகை கிடைக்கும்?

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு இருந்தால், பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் சேல் விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிக் இயர் எண்ட் சேல்  விற்பனையில் கூகுள் பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் 8 சீரிஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ போன் மாடல்களில் நல்ல சலுகைகள் கிடைக்கின்றன. 

ஐபோன் 14ஐ ரூ.54,999 விலையில் வாங்கலாம். அதேசமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி போனை தள்ளுபடிக்கு பிறகு ரூ.37,999க்கு வாங்கலாம். அதேசமயம் கூகுள் பிக்சல் 7ஐ ரூ.35,999க்கு வாங்கலாம். விவோ டி2 ப்ரோ 5ஜி-ஐ 21,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

மலிவான விலையில் மடிக்கணினிகள்

நீங்கள் பல்வேறு பிராண்டுகளின் மடிக்கணினிகளை மலிவாக வாங்கலாம். பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் சேல் விற்பனையில், Intel i5 செயலியுடன் வரும் Acer One14 ஐ 36,990 ரூபாய்க்கு வாங்கலாம். Lenovo IdeaPad Flexஐ ரூ.65,990க்கு வாங்கலாம். நீங்கள் பட்ஜெட் விலையில் மடிக்கணினி வாங்க நினைத்தால் HP 255 G9 840T7PA ஐ ரூ.19,990க்கு வாங்கலாம்.

ஸ்மார்ட் டிவிகள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடி

பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் சேல் விற்பனையின் மூலம் நீங்கள் பல்வேறு பிராண்டுகளின் டிவிகளை மலிவான விலையில் வாங்கலாம். ஸ்மார்ட் டிவிகள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். 10 ஆயிரத்திற்கும் குறைவான பட்ஜெட் விலையில் டிவிகளை வாங்கலாம். தாம்சன் டிவி ரூ.5,999 ஆரம்ப விலையில் விற்பனையில் கிடைக்கிறது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.