புதுடில்லி: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா என்பவர், கொலை வழக்கில் சிக்கி ஏமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காண அந்நாட்டிற்கு செல்ல நிமிஷாவின் தாயார் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், நிமிஷாவை காண, அவரது தாயார் ஏமன் செல்ல மத்திய அரசு தேவையான வழிவகைகளைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள ஒரு விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரியும் இந்தியராஜ சாமுவேல் ஜெரோம் என்பவருடன் நிமிஷாவின் தாயார் பயணிப்பார் எனவும் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், பயணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், பயண விவரங்களை தெரிவிக்கவும் தாயாருக்கு உத்தரவிட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement